Thursday 31 May 2012




கண்கள்

தூங்கியும்

தூங்கவில்லை

குழந்தையின்

" மனக் கண்கள் "

தந்தையின்

மரணத்திற்கு

பின்

ஈழத்தில் !



பாதை

தொடங்கும்

முன்னே

முடிகிறது

தாயின்

கருவறையில்

குழந்தையின்

பயணம் !















நிலவின் மடியில்

குளிரின் அணைப்பில்

குயில்களின் தாலாட்டில்

உறங்கும் போது

இறப்பேன் என்றால்

மீண்டு(ம்) பிறப்பேன்

அவ்வாறே மறுபடி மரிக்க ........!




மந்தையில்

ஆடும் கூட

ராகம்

பாடியது

அவளது

வளர்ப்பால்,,,,,,,!


உலகின்
ஓசை
எழுமுன்
எழுந்து

உலகின்
ஓசை
அடங்கியபின்
உறங்குவதுதானோ
காதல் ?????

உயிர் மையை
கரைத்து
மெய்யை
வரையும்
ஓவியன்
தானோ காதல் ???


துடிக்கும்
இதயம்
அறுத்து
மற்றவருக்கு
கொடுக்கும்
மருத்துவன்
தானோ காதல் ????


இல்லை, இல்லை, இல்லை



அன்பின்
உன்னதம்
அறிந்து
மனதை
பக்குவபடுத்தும்
"தாய்மை "
உள்ளமே காதல்




சின்ன விழி பார்வையினால் என் உயிரை நீ எடுத்தாய்...

கள்ளசாவி போடாமல் என் இதயகூட்டை நீ திறந்தாய் ....

வெள்ளந்தி மனசாலே நீ என்னை பதியமிட்டாய் ....

சித்திரை சூரியனை மார்கழி நிலவாய் குளிர வைத்தாய் ....

வெண்ணிலவின் வியர்வையிலே சூரியனும் மூழ்குதடி ....

உன் மனக்கதவை நீ திறந்தால் மீண்டு(ம்) வருவேன் உன்னை பார்க்க ...

தேவதையின் சிறகுகளில் ஒட்டிக்கொள்ளும் துகளாணேன்
விண்ணுலகம் தேடி செல்ல அல்ல,  உன் கண்ணுலகம் காண்பதற்கு .....

கோகுலத்து ராதையினை நானும் கண்டதில்லை உன் சிரிப்பழகை கண்டபின்னே அக்கவலை எனக்கு இல்லை...

விண்ணவரின் தேவதையே, மண்ணுலகின் வான்மதியே,
உன் பௌர்ணமியை நான் காண என்ன தவம் செய்யவேண்டும் ????

பூக்களின் மகரந்தமாய் பறந்து வரும் என் மனதை காற்றாய் மாறி திசைமற்றுவதும் ஏனடியோ ?????

கார்முகிலின் நீர்த்துளியாய் வந்தவளே என்மனதை ஒரு முறைதான் பாரடியோ !!!!!

சந்திரனின் தேய்பிறையாய் கரைந்தேனே

உன் சம்மதத்தை எதிர்நோக்கி நின்றேனே .....

பட்டமரம் துளிர்விடத்தான் ஒரு வார்த்தை சொல்லடியே ............!









விதவையின் காதலன் கண்ணீராக ..........

சுட்டுவிரல் ரேக தேய அவ சுண்ணாம்பு தடவி தந்த வெத்தல தான் செவ்வானம செவந்திடுமே ......

பொட்டளிக்க நிக்குறாலே சூரியனும் அழுகுதம்மா .....

பூத்த பூவு விரியுமுன்னே கருகித்தான் போனதம்மா ......

அள்ளிவெச்ச குங்குமமும் கரஞ்சு தான்   போகுதம்மா ....

தங்கமா வளந்தவதான் கலையிழந்து போனாளே ....

நிதமும் கொலசாமி கும்புட்டு கொலவிகல்லா ஆனாலே ....

நினைச்சபடி நடந்திருந்தா நல்ல வாழ்க்க வாழ்ந்திருப்பா ....

ஊரான் சொல்கேட்டு வீணாதான் போனாலே .....

உன் ராவில் விளக்கேத்த விடிவெள்ளியா நன் இருக்கேன்

ஊரத்தான் நம்பாதே வெறும்பேச்சு பேசிடுமே .......

உன் வாழ்க்க உன் கையில், நீ நல்லதொரு முடிவெடுத்தா போதுமடி

உன் விரல நான் புடிச்சு வாழ்வாங்கு வாழ்வேனடி .........!






கார்முகிலே கார்முகிலே என்னவளை கண்டாயோ ???

பிள்ளைத்தமிழ் பேசிடும் என் மயிலிறகை கண்டாயோ ???

கொங்கு நாட்டின் திருமகளாய் பிறந்தவளை கண்டாயோ ???

பகலிலும் விழித்திருக்கும் என் பால்நிலவை கண்டாயோ ???


சூரியனே, சூரியனே என்னவளை கண்டாயோ ???

என் சித்தம் எல்லாம் நிறைந்தவளை நீயும்தான் கண்டாயோ ???

விண்மீன்களை விழிகளாக கொண்டவளை கண்டாயோ ???

எனையன்றி பிறர் தொட்டால் மரித்துவிடும் குணம்கொண்ட செங்கதிரை கண்டாயோ ???



என் மனமே என் மனமே என்னவளை கண்டாயோ ???

வெள்ளை மனம் கொண்ட என் தேவதையை கண்டாயோ  ???

என் விழி மூடாமல் உலகமெலாம் தேடுகிறேன் என் காதலியை கண்டாயோ ???




கெண்டையின் கொண்டையிலே அரளி பூவ வெச்சதாறு ?????

வெண்ணிலா மூஞ்சியில மீசயதான் வரஞ்சதாறு ??????

சிறு சட்டி தூக்கமுடியாம அதுநொருங்க போட்டவளே ,

கருவாடு மூட்டபோல இத தூக்கி போறதெங்கே ???????

பள்ளிபடிப்பு மண்டையிலே ஏறுமுன்னே

கூன்விழுந்த கிளவிபோல ஆனதென்ன ????

வெடயில்லா கேள்வி எல்லாம் கேக்குரானுங்களே

இந்த சோதனைக்கு தீர்வு காணுற நாளும் எப்போ ????







மனைவியின் மரணத்தை தாளாத கணவனின் புலம்பல்களாக .....!




ஜிலேபி கொண்டைபோட்டு என் மனச கெடுத்தவளே,

வாய் மணக்க கருவாட்டுகொழம்பு வெச்சு என் வயித்த நிறச்சவளே,

தினம் புதுராகம் பாடி என் காதில் இனிச்சவளே,

நித்தம் என அணைச்சு ரெண்டுபுள்ள பெத்தவளே,

சிற்றெறும்பு கடிச்சாலும் அது குலம் அழிய வேண்டி நின்னேன் .....!

செங்கரையான் உன்னை அறிக்க அதைகேட்டு நானும் நிக்குறேனே,

என் உலகம் விட்டுவிட்டு மண்ணுலகம் போனவளே,

மறுஜென்மம் நீ எடுத்து மீண்டு வாடி என் கருங்குயிலே,

நீ பெத்த புள்ள ரெண்டும் வீதியிலே வாடுதடி,

அத கூட பாக்காம கண்ணு ரெண்டும் மூடுனியே

பச்சை மரம் எரியுதடி பாவிமக போனதால,

உன்ன விட்டு நானா வாழ என்ன  பாவம் செஞ்சேனோ ????????

நானும் வாரேன் உன்கூட போய்விடுவோம் மேல்லோகம் .............!









 இறந்த உடலங்களின்

கதறல்களோ??

ஏழைகளின் புலம்பல் .............!



விண்ணை கடக்கும் பெண்ணே

என்னை
கடக்க
மட்டும்
ஏன்
இந்த
தயக்கம் ???


என் மீது உள்ள காதலா ??

உன் அண்ணனின் காவலா ???





நீல நிற

மீன்களை

சுற்றி

கருப்பு வளையங்கள்

"  கண்களை சுற்றி அவள் இட்ட மை "

















உனது

அகராதியில்

புதுமை

என்பது

ஆடைகளை

குறைப்பதுவா ???



அரைகுறையாய்

மெழுகு சிலை .............!










வீசித்திறியும் காற்றே
ஓடிவிடு
உன் நுரையீரல்
அறுக்க வருகின்றன
நுண்உயிரிகள்.....


வீசித்திறியும் காற்றே
ஓடிவிடு
உன் வாயிலாக மக்களை
பழிவாங்க வருகின்றன
விஷகிருமிகள் ......

வீசித்திறியும் காற்றே
ஓடிவிடு
உன் நரம்பறுக்க
வருகின்றனர்
நரகசூரர்கள் ........


வீசித்திறியும் காற்றே
ஓடிவிடு
ஓஜோனை
மட்டுமல்ல உன்னையும்
ஓட்டையாக்கி விடுவர் ஜாக்கிரதை ..........


வீசித்திறியும் காற்றே
ஓடிவிடு
உன் புலன் கெடுக்க உண்டு பலர்
நலன் காக்க விரும்புவோர் சிலரே .....


ஓடவேண்டாம் காற்றே
நில் .......!

உன் மிச்ச நுரையீரல்
காக்க
ஒரு யோசனை .....!


முகமூடி
அணிந்துகொள் ......


அந்தரத்தில்
மிதக்கட்டும்
முகமூடிகள் ....


ஓடவேண்டாம் காற்றே
நில் .......!

நீ
இறந்து
உலகை
இறக்கவிடு ........


எந்திர வாழ்கையில்
இயற்கை எழிலை
காக்காமல்
கருக்கும்
மனித இனம்
அழியட்டும் .........


உன்னத வாழ்வை
உணராமல்
பிறர் உணர்வில்
சுயநலம் காணும்
மனித இனம்
அழியட்டும் .....


நல்லோர்
சிலர் போதும்
உனக்கு.....


நோயற்ற வாழ்வை உருவாக்கு ...
இயற்கை எழிலை வியந்துபாடு ...


சுயநலம் என்னும்
பகைவனை
அழித்து


சாதிமதம் இல்லாத
சமத்துவ வாழ்வை
வரவேற்று
மகிழ் ..........


"அன்பு" என்னும் விதையை விதைத்து .....

"இயலாமை" என்னும் களையை எடுத்து .....

"புது உலகம்" என்ற பயிரை அறுவடை செய் ..........!






Tuesday 29 May 2012






ஊர் உறங்கும்

மையிருட்டு வேளையிலே

மனம் என்னும்

ஊமை நாயகனின்

கூக்குரல் நாடகம்

"கனவுகள் "



Monday 21 May 2012




இறுதி உயிர் இறுதி பெரும் வரை

உயிர்கொண்டு வாழும்

ஒரு உயிர் இயற்கை .........

மடியபோவது மட்டும் மனிதன் ...........!
 — 




நீ கலைத்து விட்ட கூந்தல்

இன்று வானம் மூடிய முகிலாகி

என் உயிர் வளர்க்கும் அமுதாகி

நனைக்கிறது

என் உடலை ................!









கண்ணில் கவிபாடும் கருத்தவிழி காரிகையே

உன்னை துதிபாட என்ன தமிழ்நான் கொணர்வேன் .........

உன் சின்ன இதழ் சிரிப்பினிலே என் துன்பம் எல்லாம் தான் பறக்க

சிறு உதவி செய்தே உயிர் காப்பாய் என் அழகே ............!




Thursday 17 May 2012





நெஞ்சருத்த நினைவை எல்லாம்



பெருவகிடாய் வாங்கிக்கொண்டு



தீராத சோகம் தன்னை தீர்த்திடவே



எண்ணி நின்றபடி தவம் செய்யுதோ


இந்த "சுமைதாங்கி "






உயிர்வலிக்கும் பொழுதுகளில் எனக்கு மருந்தானதும் உன் நினைவுகள் தான் .....


இன்று என்னை உன்னை விட்டு நெடுந்தூரம் நடக்க செய்ததும் உன் நினைவுகள் தான் .....

உருவம் அழித்து என் உயிரை உடன் அழைத்து சென்றதும் உன் நினைவுகள் தான் ....





Wednesday 16 May 2012




உன் மனம் தரித்த வெள்ளுடயால்


வெளுக்கபட்டன ஏழைகளின்


"கருப்பு சரித்திரங்கள் "













முல்லை மலர் தேரேனிலே

பயணம் செய்யும்

கருப்பு நிலா

"கருவண்டு"













வானம் எனக்கு ஒரு போதை மரம்


தினம் உன் நினைவுகளை பரப்பி



தத்தளிக்க விடுவதால் ..........!  




















நேர்கோடு நீ எடுத்து பிரித்து காட்டிய

நேர்வகிடு கணிதத்திற்கு

கிடைத்த முதல் வெற்றி ..........














புண்பட்ட மனம் இன்று புது கவிதை பாடுதம்மா,

நெஞ்சுணர்ந்த சிறுவலி தான் பெருந்துயரம் ஆனதம்மா,

தினம் கண்ட சூரியனும் சரிபாதி உடயுதம்மா,

கண்டறிந்த கருத்து எல்லாம் உதவாமல் போனதம்மா,

நிழல் கொண்ட உருவம் எல்லாம் நிழலாக

மெய்கீர்த்தி கூட இன்று பொய்கீர்த்தி  ஆனதம்மா,

பிறர் கொண்ட சுமை எல்லாம் சுமைதாங்கி தாங்கிடுமே

சுமைதாங்கி கொண்ட சுமை தூக்க யார் வருவார்???????








Tuesday 8 May 2012




என்னுள் கருத்தரித்த

முதல் குழந்தை ,

உனக்காக நான்

எழுதிய முதல் கவிதை ...........!




உங்கள் அன்பு

நண்பன் மனோ .......



நடைபயிலும்


குழந்தை போல


தள்ளாடி நடக்கிறேன்


உன் நிழலுக்கு துணையாக .............






Saturday 5 May 2012




செந்தமிழின் வன்மையினால்
என்னவளை பாடிடுவேன் .....

சிறுபிள்ளை சிரிப்பினிலே
அவளுடன்தான் பேசிடுவேன் ....

ஆ வின் மடி தூய்மையை போல்
திருமகளை வாழ்த்திடுவேன் ......

மென்மை இதழ் மலர்கள் கொண்டு
அவள் பாதத்தை பூஜிபபேன் ........

எழுந்து வர சொல்லுங்கள்
யாரேனும் ஒருமுறை
அவளை கல்லறையில் இருந்து .........









தரித்திரம்
என்று சொன்னவர்களிடம்
என் மகளொரு 
சரித்திரம் என்றவன் ...!

மழுங்கிப்போன 
மூளைகளை
உன் பேனா முனைகள்
கூர் தீட்டட்டும்  என்றவன் ...

மலர் மலர்ந்தபோது
பெண்மையின்
முக்கியத்துவத்தை
தாயாகி உணர்த்திய 
தந்தையுமானவன் ...!

ஐம்பது பைசா தருகிறேனடா ..
அக்காவிற்கு பேனாவாங்கிவா.
என்றவளை
இதுதான் ஊழலின் முதல்படி
என்று விளங்கச் செய்தவன் ..!

அன்பே வாழ்க்கை
என்று புறாவும்
பூனையும் கிளியும்
முயலும் நாயும் 
ஒன்றாய் வளர்க்க
கற்றுக்கொடுத்தவன் ...!

கல்வி கற்றுக் கொடுக்கும்
பாட சாலைகள்
மதசாலைகள் ஆனபோதும்
சாதிச் சங்கங்கள் துளிர்விட்டபோதும்
தமிழச்சி
என்று எனக்குள் என்னையே
உணர்த்தியவன் ....!

தரணியில்
யாருக்கும்
மண்டியிடாத இவன்
மரணத்திடம் மண்டியிட்டுவிட்டான் ...!

என்னை இந்த உலகிற்களித்த இதே நாளில்
என் மகனாய் பிறந்து
தாயாக்கிவிடு
என் தாயுமானவனே..!









எழுதியவருக்கு நன்றி 



அழகை தேடும் காதலரே
கொஞ்சம் உள்ளம் தேடுங்கள் ....

கள்ளம் இல்லா உள்ளம் கண்டால்
உடனே சேருங்கள் .....

சாதி மதம் தேவையில்லை
மனதில் கொள்ளுங்கள் ........

வீட்டாரின் சம்மதமும்
கொஞ்சம் கேளுங்கள் ....

வானும் மண்ணும் போற்றும்
வகையில் இனிதே வாழுங்கள் ...........


சிறை கண்டது

என் மனம்

உன்னில்

தூக்கிலிடமாட்டாய்

என்ற

நம்பிக்கையில் ..........!



எந்த வைத்தியன்

செய்தது

"கருத்தடை "

பயிர்விளையா

"மண் "



இமைகளின் ஓரம்

நீர்த்துளியாய்

மனதின் ஓரம்

தீராத வலியாய்

வருவதுதானோ

" காதல் "




என் கனவின் தன்மை
மாற்றியவளும் நீதான் ....

என் வாழ்வின் அர்த்தம்
தந்தவளும் நீதான் ......

என் காதல் கதவை
திறந்தவளும் நீதான் ........

வடிவிழந்து தேய்பிறையாய் இருந்தவனை
முழுநிலவாய் செய்தவளும் நீதான் ....

வீடு வந்த தேன் நிலவாய்
ஆனவளும் நீதான் ....

மாலைநேர தென்றலென
வந்தவளும் நீதான் ....

பாலைவன நீர்போல என் தாகம்
தீர்த்தவளும் நீதான் ....

நாட்டுப்புற கவிஞன் என்னை காதல்
கவிஞனாய் மாற்றியவளும் நீதான் ......



 நீதான் என் காதலி .....









கவிதை எழுத

விருப்பம் இல்லை .......

என்

தமிழே

நீ என்

அருகிலேயே  இருப்பதால் ......



வரண்டு போன

பாமரனின்

வாழ்வை கூட

சட்டென உரசி செல்லும்

தென்றல்

"காதல்"




தலைவனை கண்டு மையலுற்ற தலைவியின் ஆசைகளாக ......


வேலன் அவன் கண்கள் தீண்டி வேல்பட்ட

மான்போல எனதுள்ளம் ஆனதே தோழி ....

ஆன்மபலம் கொண்டவனால் என் சித்தம்

கலங்கிபோனதே தோழி,,,

கவித்துவம் கொண்டவனால் என்கவி

மறந்துபோனதே தோழி ...

விடைசொல்வான் என காத்திருந்தேன் எனை

விடுகதயாக்கி  போனான் தோழி...

கண்தொடும் வரம் கொடுத்தவன்

கை தொடும் முன்னே மறைந்துவிட்டான் தோழி...

நீர்பிரிக்கும் அன்னத்தையும் கவித்தேன்

பறிக்கும் குயில்களையும் தூதுவிடு என் தோழி ...

அவை கண்டுணர்ந்து வந்து சொன்னால்

அவனுடன் காலமெலாம் களித்திருப்பேன் தோழி...

வீதிவரும் ஜோதியென மக்கள் வணங்க

நல்வாழ்க்கை வாழ்ந்திடுவோம் தோழி ........!




காதல் இனி வேண்டாம் என்ற காதலியால் கலங்கி நின்ற காதலனாக ...


விடிகின்ற பொழுதெல்லாம் வெறுமையாய் விடிய கண்டேன் ...

என்னுள்ளே நீ இருந்தும் வெற்றுடலாய் நான் உணர்ந்தேன் ...

கவிகுயிலை நீ இருந்தும் கவிதீட்ட தடைபோடும் என் பேனா ...

மலர்ச்சரமாய் நீ எடுத்து வாழ்த்தாத காரணத்தால்

மடிகின்ற மலர்களுக்கு மரண ஓலம் படுகின்றேன் தினம் தினமும் ...

கனவறுத்து போய் இருந்தால் கலங்கமாட்டேன் பெண்மலரே

என் நெஞ்சுஅறுத்து போய்விட்டாய் மண்மேலே ...........!




வண்ணமயில் கண்டுகொண்ட கார்முகில்போல்
கண்டுகொண்டேன் என்னவளை கண்முன்னே
சட்டென்று தோன்றியது சில கேள்விகள் என்னுள்ளே ........

தங்க இலை தாமரை அவள்தானோ ??

வான்கொண்ட சித்திரசோலையின் மகள்தானோ ??

மதியழகினும் மேன்மைகொண்ட தனிஉலகம் கொண்டவளோ ??

தனி உலகில் பூப்பெய்திய தமிழ்மகளோ ??

என்னோடு பாடவந்த தேன்குயிலோ ??

கனவோடு பேசவந்த காரிகையோ ??

நான் தீட்ட வீடு வந்த தூரிகையோ ??

என்னோடு வாழ வந்த தமிழ்மொழியோ ???





வலிதந்த போதும்

சளைக்காமல்

மனிதனால்

தேடப்படுவது

"காதல்" மட்டுமல்ல

"நட்பும்" தான்.........!



கண்டநொடி
கட்டுண்டேன்
"காதல் ' எனும்
பெருங்கயிற்றால்!

வலி இருந்தும்,
பொருத்து இருந்தேன்
கன்னி அவள்
கண்களுக்காக !

பெருந்துன்பம்
பெற்றதனால்
மயக்கமுற்றேன்
அந்தநேரம் ...

விழித்து பார்த்த
அந்தநொடி
விண்ணில் தோன்றும்
"மின்னலாய்" மாறி
மறைந்துவிட்டால்
நெஞ்சின் ஓரம்....

கண்திறந்து
பார்த்தபோது
நான் இருந்தேன்
என் வீட்டு
கதவின் ஓரம் ........!




விதி விளையாடிய

சுவடுகளை

தேடுகிறேன்

அதன் பாதையிலே

சென்று

அதனை வழிமறிக்க .........!



விடிகாலை தென்றலிலே மொட்டுவிட்ட மலர்போல,

என் வாழ்வின் மையத்தில் சுகந்தமாய் பூத்தவளே,

குழலின் கீதமென காதுகளில் பாய்ந்தவளே,

விழிதேடும் பௌர்ணமியாய் என்னருகில் நின்றவளே,

இனிக்கின்ற தேன்தமிழாய் என்வாழ்வில் இனிப்பவளே,

ஒளி தெறிக்கின்ற விண்மீனாய் என்னுடன்தான் நிலைத்தவளே,

சேரும் இடம் தெரியவில்லை இருந்தும் உன் வழியில் நான் நடப்பேன்,

விழிமூடும் பொழுதினிலும் உன்மடியில் நான் இறப்பேன்,

என் ஆன்மாவில் நீ இருப்பாய் ............!




இமைகதவு மூடிவிட
மனக்கண் கதவு
திறந்து விடும் காதலருக்கு ....


காதல் என்னும்
பெருங்காற்றில்
கரைந்துவிட்ட
சிறுமலர்கள்
ஆணும் பெண்ணும் ....


சிற்றின்ப சிதறல்களில்
சிக்குண்ட
மண்புழுக்கள்
காதலர்கள் .....


ஏகாந்த சூரியனின்
செங்கதிராய்
காதல் ...

காற்றடித்தால்
சாய்ந்துவிடும்
தென்னை போல
காதலர்கள் ......


மின்மினியின் சிறு
ஒளியாய்
தோன்றுவது அல்ல
காதல் .....

பிற உயிர்வாழ
கதிரவனால்
தோற்றுவிக்கப்படும்
பேரொளியே
காதல் .........!

Friday 4 May 2012





உரு கொடுத்து உயிர்கொடுத்து

பிண்டம் ஒன்று அண்டம் ஆளவைக்கும்

தாய் ஒருவளே

உண்மையில் " பிரம்மன் "



லட்சம் கொசுக்களுக்காவது

அன்னதானம் இடுவோம் எங்கள் உடலை

தினமும் இரவில் .....


சாக்கடை ஓரம் உறங்கும் மக்கள் ........



கவித்தேன் குடிக்கும் வண்டு இவனாம்,

உயிர்மெய் கரைக்கும் திராவகமாம் ,

செம்மொழிகோர் சூரியனாம்,

கருத்து சோலைக்கு மன்னவனாம்,

அனுபவ பார்வை கொண்டவனாம்

அதையே வரி(பாடல்)யாய் தந்தவனாம் ,

விதைகளுக்கு (காதல்)எல்லாம் வித்தகனாம்,

வாழ்ந்த காலங்கள் கொஞ்சம் எனினும்

இறவா கவிதை உலகை படைத்தவனாம்,

அதிலே உவகை கொண்டவனாம்,

தமிழ் எனும் பெருங்கடலில் குளித்து கரைகண்ட கதிரவனாம்,

இவனோ தன்னை (தமிழ்)தாசன் என்பான்,

பிறரோ இவனை "கண்ணதாசன்" என்பர்



வானத்தின் சோகத்திற்கு

வடிகால் ஆகிறது

பூமி

மழை பெய்யும் போது..............

நினைத்து பெருமை கொண்ட நட்பும்

கொதித்து வெறுமை கண்ட பகையும்

மாறலாம்

காலத்தின் கட்டாயத்தால் .......!



நீ கோபத்தில் உதிர்த்துவிட்டாய் வார்த்தைகளை


தவிக்கிறது என் நெஞ்சம் ....


வார்த்தைகள் சிதறிய வேகம் உன்னை


காயபடுத்தி இருக்குமோ என்று ...........!