Tuesday 2 October 2012





வானம் எனும் 

நீல பொய்கையிலே 

இயற்கை மங்கை குழல் 

விரித்து நீராடி

நெருஞ்சிமுள்

பூப்போல நட்சத்திர

பூச்சூடும்

பொன்னிரவில்

தனை மறந்து

வீழ்ந்து கிடக்கும்

ஒரு

பாதி சூரியன்


" சிறுகுழந்தை "


நீ ஊட்டும் பால் சோற்றை விட 
நீ பேசும் 
பாச 
வார்த்தைகள் 
என் பசியை 
போக்குகிறது .....

தாய் ஒருவள்
இல்லை என்றால்
காற்றும் கூட
இளைப்பாற
இடமிருக்காது
பூமியில் ........

என்னுள் ஏக்கம்
ஊற்றெடுக்கின்றது
பெண்ணாய்
பிறக்கவில்லையே
என்று .....
தாய்மை
அடைய
வழி
இல்லையே
என்று ...........
நீ விழித்து 
இருந்தநேரம் கூட 
எங்கள் 
இல்லத்தில்
குறைந்தது இல்லை
சிரிப்பு சத்தம் ......


வார இறுதி தமிழுக்காக
காலை முதல் இடம் பிடித்த
வீட்டு திண்ணை
மறந்து போனோம் ...


தமிழுடனே பயணிக்க
வேர்கடலை படகேறி
பயணம் தொடர்ந்து
வெற்றி கண்ட
நிமிடங்கள்
மறந்து போனோம் ........

சண்ட வந்து பிரிஞ்ச
போதும் அந்த தமிழ் காண
கூட்டுசேரும்
நண்பர்களை
கண்களிலே மறந்து போனோம் .......


கலர் கலரா கனவில்
வரும் அன்று பார்த்த
"வெள்ளை படம் "


கூடி இருந்து பார்த்த படம்
மறந்து போகும்
போனாலும்
பார்த்த நொடி பசுமையிலே
காலமெல்லாம்
செழித்திருக்கும் .....


தேர்ந்த சில நிகழ்ச்சியினை
பண்டிகையில் கண்டு விட்டால்
திரண்டு வரும் வெள்ளம்
போல ஊற்றெடுக்கும்
உற்சாகம்.....


அம்மா கையில் நெய் முறுக்கு
வாங்கிதின்ன போர் தொடுப்போம்
அப்பா வந்து மிரட்டயிலே
முந்தானை கவசமேர்ப்போம் ...


தமிழ் இல்லா நேரம் எல்லாம்
தன் பழைய கதை சொல்லும் போது
அப்பா விடும் பெருமூச்சு
கூடி நிற்கும் துன்பம் எல்லாம்
தூரபோகும் தூசாக .....

அன்று வாரி அணைக்க காலன் வந்தாலும்
விரட்டி அடிக்க சொந்தம் உண்டு


அன்று எந்த துன்பம் வந்த போதும்
சொல்லி அழ அன்னை மடி கண்டோம்
ஆற்றுதல் பெற தந்தை தோள் கொண்டோம் .....


இன்று சொல்லி அழ தாய் இல்லை
அவள் சேர்ந்துவிட்டால் கற்பனை "காவிரி " யின்
இறுதிசடங்கில் ...... சம்பளம் இல்லா துணை நடிகையாக



தோள் தேட தந்தை இல்லை அவர்
இறங்கிவிட்டார் சுரணை இல்லா
அரசியல் பேச்சு தொகுப்புகளில்


தாத்தாவின் கண்ணாடி மறைத்து
களவு பழக நேரம் இல்லை குழந்தைக்கு
கை கொடுக்க காத்து
இருக்கிறான் குழந்தை பீமன்


இரண்டு வண்ணம்
நீ கொடுத்த போதும்
அன்பு வண்ணம்
மாறாமல் சொந்தம்
கொண்ட குடும்பம்
எல்லாம்
இன்று
நோய் வந்த
கோழி போலே
முடங்கி கிடக்கு
வீட்டுக்குள்ளே ....


வீட்டுக்குள்ளே அன்பும் இல்லே
நெஞ்சுக்குள்ளே பாசம் இல்லே
அரவணைக்க ஆளும் இல்லே
அரிதாரம் பூசிய
வானரங்கள் கூத்தடிக்க

பலவண்ணம் நீ கொடுத்த
போதும்
வாழ்வின் வண்ணம்
நிலைக்களையே ....

வண்ணம் எல்லாம்
மாறிபோச்சு அதோட
வாழ்க சேர்ந்து
வாடிபோச்சு
சேர்த்து வெச்ச
பாசம் எல்லாம்
கனவினிலே
கரஞ்சுபோச்சு



கூடி வாழ்ந்த காலம்
எல்லாம் நிகழ்
காலத்துல
நிழலாக
மாறிடவே ,

மாறிவிட்ட காலத்துல
தாரத்தை இன்னொருவனுக்கு
மணமுடிக்கும் மணவாளன் ....


தன் தாய்க்கு
மனம் செய்து வைக்கும்
பாக்கியவான்கள்
பிள்ளைகள் .....

நெஞ்செங்கும்
விஷம் பரப்பும்
நோய்கிருமி
வாழுமிடம்
"வண்ண தொலைகாட்சிபெட்டி"

இரண்டு வண்ணம் தந்த போதும்
அன்பு மொழி உடனே
தென்றலெனும் புதுமை
வந்து கதவு திறக்க
வழி தந்த முதல் முற்றம்
"கருப்பு வெள்ளை தொலைகாட்சிபெட்டி "



அன்பானவர்களின் 
மௌனம் 
மனதை 
உறுத்தும் 
விதைகளை
விதைத்து
விடுகிறது......


என்ன காரணத்தினாலோ
இந்த
விதைகள்
மட்டும்
விதைத்ததுடன்
விருட்சமாகி
உயிர்போக்கும்
வீரியத்தை
மனதில்
வேரூன்ற
செய்கின்றது ...........




சிதை
கொண்ட
நெருப்பை போல
விட்டு விட்டு
புகைகிறது
என்னுள்
"தனிமை நெருப்பு "


உன் 
தேன்கனி 
இதழ்களில் 
பாட்டு 
எழுதி 
பழகிடவே


கம்பன்
தமிழில்
வார்த்தைகள்
தேடுகின்றேன்


வந்து
விழுவது
என்னவோ
"மனோ "வின்
வார்த்தைகளாகவே
இருக்கின்றது ......


கண்டம் பிரிக்கும்
ரேகை
தான்
கடக ரேகையாம்

உன் இதழ்
பிரியும்
இடைவெளி
ரேகையில்
பிரிக்க படுகிறது
என் சுக
துக்கங்கள் ..............
















கோடி
சொந்தம்
சேரும்
போதும்


காதல்
வந்து
சாமரம்
வீசும்
போதும்

உண்மை நட்பு
இல்லாதவன்
வாழ்வு

நீர்நடுவே
வாழ்வமைந்தும்
தாகம் தீராத
பறவை
போல
முடியாத
தாகத்துடன்
வாழ்விழந்து மரணிக்கும் ..........................