Monday 6 August 2012




படச்சவந்தான் எவனுமில்ல
வாழ வழி காட்டியதும் எவனுமில்ல

திறந்து கிடக்கும் வானத்திலே
சிறு மேகம் நான்தானே ........

பூட்டி வைக்காத பூமியிலே
புது மலரும் நான்தானே .......

காத்து கூட பேசிக்கிட்டே
மனம் மயங்குற பயநானே .......

வெள்ளாம வெலஞ்சதுனா
மைனர் கூட நான்தானே .....

சின்ன பொட்டிக்குள்ள காத்து  போல
என் நெஞ்சுக்குள்ள சேர்ந்து நிக்கும்
நியாபகம் எல்லாம் வெற்றிடந்தான் .......

இந்த பூமி ஏய்க்காது
வானமது பொய்க்காது

என் ஒடம்பு விழுந்துச்சுன்னா
ஆறடி நிலம் போதும்....

கண்ணீர் மடை தொறக்க
காக்கா குருவி கூட்டம் இருக்கு.....,


என் சாவு வரும் போது
நான் குளிப்பேன் பன்னீரில ........

என் சந்ததி வருத்தப்பட
நான் இல்ல காரணமா .........

பெரும்பொலப்பு பொழைக்க வைக்க
நான் சேர்த்த தேவை இல்ல வெறும் பணத்த....

நான் போன பின்னாடி எவன் எப்படி
இருப்பானோ தெரியாது .....

அவன் வாழ வழி இருந்தா
பொழைக்கட்டும் பூமியிலே ..........

வந்த வழி மறந்துபோக
நன்றிகெட்ட மனுசனும் நான் இல்ல ..........

தப்பு செய்ய வெச்சு தண்டிக்கிற
இல்லாத கடவுளும் நான் இல்ல ..................!

மொதல் மண்ணுமேல வந்து விழுந்த
சிறு பூச்சி நாந்தானே .............!








சாலைஓரம்
கடை விரித்து
வயிறு எங்கும்
பசி நிறைத்து
உம்மை நம்பி
வாழ்கிறோம் நாங்கள் ......


சொந்த வீட்டு சொந்தங்கள்
மீது பற்று இல்லாமல்
அயல்நாட்டு முதலையின்
வாயில் விழுகின்றீர் ............


உன் பணத்தை
உறிஞ்சி கொண்டு
உன் வாழ்வை வாழ்ந்து கொண்டு
அவன் உனக்கு
கொடுப்பதென்னவோ
நோய்களை மட்டும் தான் ......



நுரையீரல் இளைப்பாற
கல்லீரல் கலையாக
இதயம் சீராக
சிறுநீரகம் புதிதாக
ரத்தம் சூடாக

உன் வீட்டு முற்றத்தில்
ஆயிரம் மூலிகைகள்
ஆயிரம் நல்வினைகள்

கண்திறந்து பாரப்பா
என் வயிறும் நிறையும்
உன் வாழ்வும் செழிக்கும் ..........!


Friday 3 August 2012




சேற்று வயல் நாற்று நாடும்

சிருங்குருத்தே உன் பாதம் பட்ட

நிலம் எல்லாம் சீர் நிறையும்

இன்றையபொழுதின் நம்பிக்கை நீயே

நாளைய உலகின் பசி ஆற்றுபவன் நீயே ...........





Wednesday 1 August 2012




முற்றத்து முடிவினிலே
தொட்டு செல்லும் தென்றல் காற்று,

வாழ்வியல் வர்ணங்களில்
வந்தொளிரும்  வெண்ணிலவு,

குழந்தை கிறுக்கல் ஓவியங்களாய்
வெண்மை பூத்த மேகங்கள்,

விட்டம் பார்க்கும் முதுகிழவன்
பெரும் வயிறாய் நிமிர்ந்து நிற்கும்
மலைகள்,

படுத்து உறங்க
குஞ்சுகளுக்கு
பட்சிகள் பாடும் தாலாட்டு,

நாளைய விருந்தினன் வண்டிற்காக
தேன் சேர்க்கும் நறுமலர்கள்,

முட்டத்து வீட்டு முதிர்கன்னியாய்
முதுகு வளைந்து நிற்கும்
வாழைமரம்,

தலை விரித்து கூத்தாடும்
பச்சைமர  பருவமங்கைகள் ,

தொட்டு தொடரும்
சிங்கார சில்வண்டுகள்,

ஊர்க்கதை பேசி எக்காளமிடும்
உறவுகள்,

வாய்மொழியின் வாசலிலே
உலக தத்துவம் குடிகொள்ளும் சில
மங்கையர் மௌனம்,

எந்தன் மடியில் தவழ்ந்த
வாழ்வியல் வசந்தம்
என் நாளைய தலைமுறை
ஸ்பரிசம் தீண்டுமா?????

காதுமடல் சிலிர்க்கும்
அன்னைமடி கனவுகளுக்கு

கதவு திறக்குமா
நாகரீக நிமிடங்கள் ????????