Monday 28 November 2016

கண்களில் கனவுகள் நிறைத்திடல் வேண்டும்
இடைவெளி குறைத்திட்ட நட்பொன்று வேண்டும்
உறவினில் உண்மையை உணர்த்திடல் வேண்டும்
மனதினில் நம்பிக்கை விதைத்திடல்  வேண்டும்
கவிதையாய்  கைகளில் இணைந்திடல் வேண்டும்
திருமண சுகத்தினில் திளைத்திடல்  வேண்டும்
துயரங்கள் நிறைகையில் துளிர்த்திடல் வேண்டும்
வெறுமைகள் சூழ்கையில்  தாங்கிட வேண்டும்
காதலுக்கு அப்பால் வெகுதூரம் வேண்டும்
என் நிறைந்து போன நினைவுகளில் நீ வழிந்தோட வேண்டும்
ஏழிசை ராகங்கள்  வாழ்த்து பாடிட
பூரணம் நிறைந்து போன
மரணம் ஒன்று வேண்டும் .....!

வேண்டுதல்களுடன்
உங்கள்
தமிழ் மனோ




Friday 4 November 2016










என்
தமிழை 
நான் 
எழுத 
வார்த்தை 
பஞ்சம் 
ஆனதிலே

கற்பனையில் 
கவிதை வரி தொடுக்க 
உள்ளத்துக்கு வரி  
கொடுத்து

சூழ்நிலையின் 
சூறாவளி 
சுழன்றடிக்கும் 
வேளையிலே 

உருண்டைப்பானை 
உள்ளினிலே 
சிறு நீர் போல் 

வற்றும் நிலை 
கற்பனையில் 
கல்லிட்டு 
தாகம் 
தீர்க்க 
போராடும் 
" காகம் " 
நான் .... ! 




என்றும் அன்புடன் 
உங்கள் 
தமிழ் மனோ 




கண்களுக்குள்
கவி படைத்த
கலைஞனின்
கற்பனைக்கு
தமிழ் எழுதும்
கைகள் எல்லாம்
கவி எழுதுமே ......

மையமிட்டு
அமர்ந்திருக்கும்
குங்குமத்தின்
நிலையினிலே
என் மனம்
அமர்ந்து

நெடுந்தவத்தின்
ஒரு முடிவாய்
வந்து உதித்து  
நிறைகிறது
இந்த வரிகள் ...

கற்பனை
குழந்தைகளாய்
கவிதைகளை
பெற்றெடுக்க
சூல்
கொள்ளவேண்டும் என்ற
நெடுநாளின்
கனவில் இன்று
வறண்டுபோன
விளைநிலத்தில்
சிறுதுளியை
விதைக்கிறது
இந்த கண்கள்
என்னும்
மாயவிசை .....




Saturday 13 April 2013



நிம்மதி சூழ்க!

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!

ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை

பாசம் உலாவிய கண்களும் எங்கே?
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?
தேசம் அளாவிய கால்களும் எங்கே?
தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே

கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க

பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை

கடல் தொடு ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே விதியென்று கண்டும்
மதி கொண்ட மானுடர் மயங்குவதேன்ன !

மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும்

பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதையாகும்

தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்

மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க !
தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க !
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க !




nandri : Erode Kathir ........

விளங்காத விடியல்கள்,
சிறகு விரிக்கும் இளமை ,
நான் என்னும் மமதை,
கைமாறும் புத்தகங்கள்,
சுகமான தோல்விகள், 
விரக்தியான வெற்றிகள்,
தனித்தீவான பள்ளியறை,
சுயம் உணரும் சூரிய கதிர்கள்,
தோள் கொடுக்கும் சிறுமலர்கள,
மனம் தவிக்கும் அழகிய காதல் மாறுதல்கள்,
உறைந்து போன சோகங்கள்,
கவலை மறந்த விளையாட்டுக்கள் என

தொலைந்து போன
வாழ்க்கை
பக்கங்களில்

கண்ணீர் நிரப்பும்
மெல்லிய உணர்வோடை
"பள்ளிகூட வாழ்க்கை" 


கண்ணாடி 
முன்னாடி 
நின்னா(ஆ)டி 
நான் 
பார்க்க 

நன்னாரி
பய வந்து
கண்ணார
கண்டானே

இதழ் குவிச்சு
நின்னானே

உடல்நோவு
கண்டது போல்
இமைகுறுக்கி
நின்னேனே
இதழ்நோக
இம்சித்து
விழிச்சிறை
திறக்கும் முன்னே
காணாம போனானே .....
.
கண்டவரும்
சொலுங்களேன்
என் ஆசமச்சான்
கால்தடத்த ..........

நெஞ்செல்லாம் 
வெறியேற 
ரத்த நாளமெல்லாம் 
சூடேற 
களம் புகுமே 
சூறாவளி

துகிலுரித்த
மிருகம் தன்னின்
உடல் கிழித்து
வஞ்சகரின்
தலையறுத்து
தமிழ் தாயின்
மனம் குளிர
செய்யும் ஒரு
நாளும் வருமே ...

பெண்டிர் எல்லாம்
மென்மை என்று
புகழ் பரப்பும் ஏடுகள்
கூட இனி
பகை முடிக்கும்
ஆற்றல என்று
சரித்திரத்தில்
வடித்திடுமே ....

கண்ணயர்ந்த
பூக்களின் தேகம் எல்லாம்
புது வடிவாய் பெற்று
வந்து எதிரி தனை
வீழ்த்த வேண்டி
புது
உதிரம்
கொண்டெளுமே...

அன்றெங்கள்
உடல் குலுங்க
அழுதிடுவோம்
மன்னன்
அவன் மடிசாய்ந்து ...........

அதுவரையில்
தடை விதிப்போம்
கண்களுக்கு
கண்ணீர் வழியே
சீற்றம் குறைக்க
கூடாது
என்று ...


நல்ல நட்பு 
வேண்டி நிற்கும் 
வேளையிலே ..

தொல்லை வந்து 
சேரும் நேரம்

உள்ள நட்பும்
காரணமின்றி
விலகும் போது

உள்ளம் வெதும்புது
உயிரும் திணறுது

மனிதம் காணா
மரணம் தேடி
கால்களும்
எல்லை மீறுது ....

விடியலை விரும்பும் 

சிறு இதழ் மலரே 

உன் இதழ்கடை 

சிரிப்பினில்

ஒரு முறை நிமிர்ந்திடு

உலகிது பொருட்டல்ல

உன் கைவளை குலுங்கலில் ....


பெண் 
என்று 
பிறந்ததினால் 
உலகுபடைக்கும் 
பேரு பெற்றாய் 

இயற்கையின்
மறுபிறப்பாய்
மனிதர்களுக்கு
அமுது கொடுத்தாய்

உலகுன்ன
உடல் உழைத்து
தேய்ந்து போன
நெஞ்சம்தனிலும்
வற்றாத பெருங்கடலை
அன்பு கொண்டு
ஆளுகின்றாய்

மெல்லிய மனம்
கொண்டும் துயர் கண்டு
துவளாமல்
சிகரம் தோற்க
எழுந்து நின்றாய்

உணதாற்றல் இல்லை
என்றால் எழுகடலுக்கும்
ஆற்றல் இல்லை

ஆர்பரிக்கும்
அன்பினாலே உயர்ந்து
நிற்கும் பெண் இனமே
உங்கள் காலடியில்
எங்கள்

"இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் "