Saturday 30 June 2012




எனக்கும் உண்டு பேராசை .........


தலை நரைக்காத காற்று,

திரை விலக்காத வானம்,

மலை பொய்க்காத மேகம்,

விதை கெடுக்காத பூமி,

அமிலம் தீண்டாத நீர்,

புனிதம் தொலைக்காத மனிதம்,

கலப்பு இல்லாத தமிழ்,

கனவு தொலையாத உறக்கம்,

பருவம் தொலைக்காத காதல்,

நம்பிக்கை தேயாத  நட்பு,

அழுகை தீண்டாத தாய்மை,

திறமை  குலையாத தொழில்,

குணம் கெடுக்காத செல்வம்,

சுயம் தொலைக்காத கொள்கை,

கொடுக்கும் கை தாளாத தானம் ,

பிறவி காணாத புது உலகம்,

தன்னிலை மறவாத தமிழர் மானம்.



யாவும் கண்டபின்,

உலகின் மக்களுக்கும், இயற்கைக்கும் ,

தார்மீக சொந்தமாக மாற வேண்டும் .

ஆனபின்,

விழிமூடி நல்லுலகம் சேர வேண்டும் ,

பிறர் எனக்காக ஒரு பாடல் பாட வேண்டும் ,

பிறந்து வந்த நற்பயனை அடைய வேண்டும் .............!







கண்ணெதிரே

பல பொழுதுகள் விடிந்தபோதும்

எங்கள் வாழ்வில் மட்டும்

விடிவெள்ளி முளைக்கவே இல்லை ........

இருந்தும் சில நிமிடங்கள்

எங்கள் மனதை சமாதனம்

செய்ய எங்கள் உதடுகள் சிந்தும்

ஒரு அமுத துளி இந்த

"புன்னகை"

Thursday 28 June 2012




நல்லோர் தேடும் புது உலகம் அது

சுயநலமில்லா தனி உலகம்

பிறர் நலம் பேணும் பொன் உலகம்

இருளில் ஒளி ஏற்றும் திறனுலகம்

அதிகாரம் ஒலித்து அஹிம்சை வளர்க்கும் அன்பு உலகம்

படைப்போம் நல்வாழ்வு வாழ்வோம் 

நிம்மதியாக ........... மகிழ்ச்சியாக .......!

Wednesday 27 June 2012





கனவுகளை களவாடும் காதல்.....

வற்றிய குளங்களை கணக்கெடுத்து கண்ணீரால் நிரப்பும் காதல் .......

உள்ளத்து உணர்வுகளை உருவாக்கும் காதல் ....

உருவாக்கிய உணர்வுகளை மெருகேற்றும் காதல் .....

இல்லாத இறை அருளாய் நினைக்கதோன்றும் காதல் ...........

வந்து ஊடுருவியபின் சுவடுகளை அளிக்க முடியாதது காதல் ..........!




Thursday 21 June 2012







புழுவிற்குள் முதுகெலும்பை என் கவிதை படைக்க துணை நிற்பவன்,.......


கவிஞனுக்கு என்று உலகம் பூசிய அரிதாரம் களைந்து நீருக்கு நெருப்பை ஆடையாய் அணிவிக்கும் புது பாதை கண்டவன் .......

ராகம் பாடி வந்த குயில்களை கூட அதர்மத்தை எதிர்க்கும் வல்லூருகளாய் மாற்றும் சூட்சமம் அறிந்தவன் ......

சுதந்திர தாகம் நெஞ்சடைத்த வேளையிலே ஆணிவேர்வரை பாயும் தமிழ் அமுதமென பொழிந்தவன் ..............!


தெருக்கவிதை படைத்து வந்த என் பேனா அவன் தமிழ் என்னும் அமுது பருகி இன்று தீஜுவாலையாய் ஒளிர காண்கிறேன் .....

காதலில் மையல் கொண்ட வார்த்தைகள் யாவும் அவன் கோவகனலில்
பொசுங்கி சாம்பல் ஆக காண்கிறேன் .....



கவிதைக்குள் கனல்நிரப்பி நாடெங்கும் பரப்பிய பெருந்தகையான் கடந்திட்ட 
தமிழ் கடல் கடக்க எவருமில்லை .......... 



சுயநலத்தில் சிறை பட்ட மனிதர்மனம் மாற்றிடவும் எவரும் இல்லை ....


என் தீராத தாகம் தன்னை தீர்த்து வைக்க பாரதி எனும் சூரிய பறவை நீர்

கொணரும் கவலை இல்லை .........





தமிழ் தந்த தலைமகனை வணங்கி விடை பெறுவோம் ............!


















அந்திக்கு

பந்தி வைக்க

சந்தம் சமைத்த

வானமகள்

எடுத்து வைத்த

முதல் பொரியல் '

சூரியனின்

"சிவப்பு கீற்றுகள்" ................!



Tuesday 19 June 2012




தமிழது படரும் இடமெல்லாம் சிந்தனை கொள்ளும் உள்ளம் போல

காற்று தீண்டிய இடமெல்லாம் மலரும் காதல் சோலை .........


கவிபடைக்க காற்று கிளம்பினால் முதல் வரியாய்

அவள் பெயரை முத்தாய்பாய் எழுதிடுமே ......


தமிழ் கொடுத்த வார்த்தை எல்லாம் அவள் பெயராய் தோன்றிடுதே ????


தமிழ் படைத்த புலவன் அவன் மனக்கண் முன்னே தோன்றி

கவர்ந்திருப்பளோ ????


மதனவன் கண்ணயர்ந்த காரணத்தால் பிரம்மன் கொடுத்த தண்டனையால்

கன்னியவள் கண்களுக்குள் சிறை கண்டான் ......



வறியவர் காசு கண்டால் மயங்குதல் போலே அவள்விழி கண்டால் 


ம்யங்கிடுதே இந்த வாலிபன் மனமும் ......



தன்னிலை அறியா கனவுகளுக்குள் சிறைபட வேண்டுமாயின் 

அனைவரும் காதல் கொள்வீர் .................




நீர் உயர்திணை என்பதை மனமது மறந்தால் காதலே அனைவரையும்

கொல்லும் ............