Saturday 13 April 2013



நிம்மதி சூழ்க!

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!

ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை

பாசம் உலாவிய கண்களும் எங்கே?
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?
தேசம் அளாவிய கால்களும் எங்கே?
தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே

கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க

பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை

கடல் தொடு ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே விதியென்று கண்டும்
மதி கொண்ட மானுடர் மயங்குவதேன்ன !

மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும்

பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதையாகும்

தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்

மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க !
தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க !
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க !




nandri : Erode Kathir ........

விளங்காத விடியல்கள்,
சிறகு விரிக்கும் இளமை ,
நான் என்னும் மமதை,
கைமாறும் புத்தகங்கள்,
சுகமான தோல்விகள், 
விரக்தியான வெற்றிகள்,
தனித்தீவான பள்ளியறை,
சுயம் உணரும் சூரிய கதிர்கள்,
தோள் கொடுக்கும் சிறுமலர்கள,
மனம் தவிக்கும் அழகிய காதல் மாறுதல்கள்,
உறைந்து போன சோகங்கள்,
கவலை மறந்த விளையாட்டுக்கள் என

தொலைந்து போன
வாழ்க்கை
பக்கங்களில்

கண்ணீர் நிரப்பும்
மெல்லிய உணர்வோடை
"பள்ளிகூட வாழ்க்கை" 


கண்ணாடி 
முன்னாடி 
நின்னா(ஆ)டி 
நான் 
பார்க்க 

நன்னாரி
பய வந்து
கண்ணார
கண்டானே

இதழ் குவிச்சு
நின்னானே

உடல்நோவு
கண்டது போல்
இமைகுறுக்கி
நின்னேனே
இதழ்நோக
இம்சித்து
விழிச்சிறை
திறக்கும் முன்னே
காணாம போனானே .....
.
கண்டவரும்
சொலுங்களேன்
என் ஆசமச்சான்
கால்தடத்த ..........

நெஞ்செல்லாம் 
வெறியேற 
ரத்த நாளமெல்லாம் 
சூடேற 
களம் புகுமே 
சூறாவளி

துகிலுரித்த
மிருகம் தன்னின்
உடல் கிழித்து
வஞ்சகரின்
தலையறுத்து
தமிழ் தாயின்
மனம் குளிர
செய்யும் ஒரு
நாளும் வருமே ...

பெண்டிர் எல்லாம்
மென்மை என்று
புகழ் பரப்பும் ஏடுகள்
கூட இனி
பகை முடிக்கும்
ஆற்றல என்று
சரித்திரத்தில்
வடித்திடுமே ....

கண்ணயர்ந்த
பூக்களின் தேகம் எல்லாம்
புது வடிவாய் பெற்று
வந்து எதிரி தனை
வீழ்த்த வேண்டி
புது
உதிரம்
கொண்டெளுமே...

அன்றெங்கள்
உடல் குலுங்க
அழுதிடுவோம்
மன்னன்
அவன் மடிசாய்ந்து ...........

அதுவரையில்
தடை விதிப்போம்
கண்களுக்கு
கண்ணீர் வழியே
சீற்றம் குறைக்க
கூடாது
என்று ...


நல்ல நட்பு 
வேண்டி நிற்கும் 
வேளையிலே ..

தொல்லை வந்து 
சேரும் நேரம்

உள்ள நட்பும்
காரணமின்றி
விலகும் போது

உள்ளம் வெதும்புது
உயிரும் திணறுது

மனிதம் காணா
மரணம் தேடி
கால்களும்
எல்லை மீறுது ....

விடியலை விரும்பும் 

சிறு இதழ் மலரே 

உன் இதழ்கடை 

சிரிப்பினில்

ஒரு முறை நிமிர்ந்திடு

உலகிது பொருட்டல்ல

உன் கைவளை குலுங்கலில் ....


பெண் 
என்று 
பிறந்ததினால் 
உலகுபடைக்கும் 
பேரு பெற்றாய் 

இயற்கையின்
மறுபிறப்பாய்
மனிதர்களுக்கு
அமுது கொடுத்தாய்

உலகுன்ன
உடல் உழைத்து
தேய்ந்து போன
நெஞ்சம்தனிலும்
வற்றாத பெருங்கடலை
அன்பு கொண்டு
ஆளுகின்றாய்

மெல்லிய மனம்
கொண்டும் துயர் கண்டு
துவளாமல்
சிகரம் தோற்க
எழுந்து நின்றாய்

உணதாற்றல் இல்லை
என்றால் எழுகடலுக்கும்
ஆற்றல் இல்லை

ஆர்பரிக்கும்
அன்பினாலே உயர்ந்து
நிற்கும் பெண் இனமே
உங்கள் காலடியில்
எங்கள்

"இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் "


தேய்ந்த
பொழுதும்
தேயாத
நினைவுகள்

உன்
விழி
விடியலில் ..


என் 
விரலிடையில் 
தூரிகையாய் 
உன் நினைவு 
அமரும் 
போது

ஓவியமாய்
உன்
உருவம்

வரைந்தவன்
நான்
அல்ல

நானான
நீ ................!

வயகாட்டு மூலையிலே கல்கூட்டி
சமைச்ச சோறு போல ருசியும் இல்ல 

சந்தன தொட்டிலிட்டு தாய் படும் 
தாலாட்டு போல பாட்டுமில்ல 

களவானி பயபோல கண்டொளிஞ்சான்
ஆட நின்னு துப்பறியும் சுகமும் இல்ல

நொரை பொங்கும் ஆத்தோட குதிபோட்டு
மூழ்கி வந்த நொடி போல ஏதுமில்ல

கருவாட்டு கொழம்போட சாமச்சோறு
கொலஞ்சு வீசும் வாசம் போல
வேற இல்ல

காசுபணம் இல்லாத போது கூட தோள்
கொடுக்க நாதிஉண்டு
கிராமத்துல

வானுமுட்டும் கோபுரம் தான்
தெருவெல்லாம் நிக்கும் போதும்
மனுசன மட்டும் காணலையே நகரத்துல ....

வயகாட்ட பலிகொடுத்து மாத்திரைய
வாங்கும் போதும்
புத்தி ஒன்னும் கூடலையே

மனுசனாக மாறலையே

காத்த கூட கெடுத்து வெச்சு காசு பண்ண
பாக்கும் புத்தி மேலோங்கி போனதம்மா

இயற்கையோட இணைஞ்சு வாழும்
இணக்கமும் தான் கரஞ்சுதம்மா

கை நிறைய பொருள் இருந்தும் இங்கே
மனம் நிறைய வாழ்க்கையில்ல ....


விளக்க 
தெரியாத 
வேதனைகள் 

வெளி வர 
முடியாத
கண்ணீர்

ரணமான
மனது

வார்த்தைகள்
இல்லாத
உதட்டசைவுகள்

தீராத
தேடல்

அனைத்திற்கும்
முதல்
சுழியாய்
உன்
மௌனம் ...........


துணையாக 
இல்லாமல் 
தூரத்தில் 
நீ இருந்தால் 
என் மனமும் 
கலங்குதிங்கே....

உனக்காக
பிறந்து வந்த
கவிதை
குழந்தை
எல்லாம்
உன்னை
வேண்டி
கதறுதிங்கே
உன்
கரம் பற்றி
நடைபயில

உணர்வு
நிறைந்த
புதுமலரே
உன் மணம் வீச
காத்து
கிடக்குது
இந்த
பாலைவனம் .....

என்னுள்
ஊற்றாய்
இருந்ததுவும்
ஏனோ ????
இன்று
காணல் நீராய்
கரைவதும்
ஏனோ ????

நிழல் இல்லாத
மனிதனும் இல்லை
உன் அன்பு
இல்லாமல்
என் கற்பனைகளும்
இல்லை

உன்
மௌனம்
எனக்கு
சம்மதமில்லை
சமாதி ...

என் உணர்வுகள்
உரைந்து
மாண்டிடும்
முன்னே
மீண்டும்
ஒளியை
தந்து விடு

இல்லை
என்
தமிழை
நீயே
கொன்று
விடு ..........


இருட்டு சாயம் 
வலிந்த என் இரவுகளுக்கு 
வண்ண கனவுகளால் 
ஒப்பனை செய்யும் 
வெண்ணிலவே

நல் அமுதே
கண்பறிக்கும் பேரழகே
அமைதி துயில்
கொள்ளும் மான்விழியே

விழிக்காத இரவு வேண்டும்
கலையாத கனவுகளோடு
காற்றாக நான் இருந்து
உன் குழல்
களைக்க வேண்டும்

கள்ளம்
இல்லா
பிள்ளை
போலே

தாயாக நீ மாறி
உயிர் சுரக்கும்
அன்பாலே

எனை
தாலாட்ட
வேண்டும்

வாழ்நாள் எங்கும்
நீண்டு கிடக்க .............

உன் மடியில்
சேயாக
மறுபிறவி
வேண்டும்
என்றாலும்
மனமுவந்து
இறந்திடுவேன்

உன் விழியில்
நீர் நிறைய
நான் வருவேன்
சேயாக
உன் மடியில் .......................

தயக்கங்கள் 
தேவை இல்லை 
இவளிடத்தில் 
காதல் கொள்ள ....

காதல் எனும்
சுவை விளக்க
இவளிடத்தில்
பொருள் இல்லை

இருப்பதென்னவோ
கூடு மட்டுமே ....

விளக்கங்கள்
தேவை இல்லை
இவள் விழி மடலில்
கவி எழுத ......

கவி எழுத
வந்தவர்கள்
விலக்கியது
இவள் துயிலை
மட்டுமே

பெண்
இவள் பெய்
என்றால்
மழை கூட
கயமையுடன்
அங்கம்
தீண்டும் ....

துணை
மறுத்த
சமூகம்
தன் உடல்
துணை தேடி
அழைத்திடுவார்
விலைமாதர்
என்று

தன் வாழ்வு
செழிக்க
துணை கேட்ட போது
தவறென்ற
சமூகம்

உடல் பசி தீர்க்க
புசிக்கின்றனர்
உணர்ச்சி இல்லா
உடலை
மட்டும் ....

ஒருசான்
வயிரென்றால்
வாழ்வழித்து
விட்டிருப்பாள

தனை நம்பும்
உயிர்களுக்காய்
தனை விற்றாள்
வெறும்
உடம்பாய் .....

உறக்கங்கள்
தொலைந்த
போதும்

உடல் மட்டும்
விழித்தே
கிடக்கின்றது
இவளுக்கு...

எந்திரத்தின்
பாகம்
போலே ...



உன் இதழ் பதியும் 
இடைவெளியில் 
உயிர் சிதறி போகுதடி 
இடைவிடாத 
முத்த தொகுப்பு 
வேண்டும் என்று
ஏங்குதடி ........


கணக்கு காட்டி
ஓடுகின்றாய்
என் இதயத்
துடிப்பை
கேளாமல் ......


கண்ணெதிரே 
கன்னியவள் 
வளைகுலுங்க 
நடக்கயிலே 
மனதோடு 
ஒரு புயலும்
உறவாடுதே .....

நிதம்
எனை மிரட்டி
அவள் எண்ணம்
குடியேற்றுதே .......

இமை சுருக்கி
அவள் வீசும்
ஒற்றை பானம்

என்
நெஞ்சுக்கூடு
தகர்த்ததோடு
இருதயத்தை
தாக்குதம்மா

உன் இதழ்
விளிம்பில்
ஊசலாடும்
என்
இளமை

கையில்
கிடைத்த
புதையலை
போல்
தாங்கிக்கொள்

இல்லை
காற்றில்
கரைந்த
திராவகம்
போல்
கரைந்து
விடுவேன் 


நான் கொண்ட காதலுக்கு 
நட்பென்னும் பொருளுண்டு 

நீ கொண்ட காதலுக்கு தாய்மை 
என்னும் சுவை உண்டு 

சுயம் மீரா அன்பும் கூட காதல்
என்னும் பொருள் தருமே

வினை கொண்ட சமூகத்திற்கு
"காமம்" மட்டுமே காதல் ஆகுதாம்
கற்பனையால் ஆண் ( பெண் ) படைத்து
கற்பனையால் காதலித்து 
கற்பனையால் அலங்கரித்து 
கற்பனையால் கவிபடைத்து 
கற்பனையால் தோற்று 
போகும்
காதலருக்கு
தெரிவதில்லை

இன்றைய காதல்
காதல் அல்ல
எதிர்பாலின் மேல்
வரும்
காமம்
என்று ..........

அவள் 
கண்கள் 
காணும் 
கனவுகளின் 
நிழல் 
கூட கவிதையாய்
விரிகிறது 


என்முன்னே
"காரிருளில் 

வானவில்" 
போலே ..........




விழியது
வினவும்
விடையில்லா
கேள்விகளால்

வினா
தொடுக்க
முடியாமல்
விரக்தி கொள்கிறது
"மௌனம் "